/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செங்கழுநீரோடை வீதி மதுக்கடையை மாற்ற கோரிக்கை
/
செங்கழுநீரோடை வீதி மதுக்கடையை மாற்ற கோரிக்கை
ADDED : ஆக 02, 2024 01:41 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில், மேட்டுத் தெரு மற்றும் நெல்லுக்கார தெரு ஆகிய இரு இடங்களில், பக்தர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தொந்தரவாக இருந்த டாஸ்மாக் கடைகள் கடந்தாண்டு அகற்றப்பட்டன.
இந்த இரு கடைகளும் மூடப்பட்டதால், செங்கழுநீரோடை வீதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அன்றாடம் ஏராளமானோர் குவிகின்றனர். செங்கழுநீரோடை வீதியில் நேரு மார்க்கெட், சங்கர மடம் ஆகியவை அருகே இருப்பதால், கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இதில் அன்றாடம் அப்பகுதியில், மதுபிரியர்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அருகில் உள்ள கடைகளில், டாஸ்மாக் கடை திறக்கும் 12:00 மணிக்கு முன்பாகவே, சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன.
டாஸ்மாக் கடைகளின் வாசலிலேயே அமர்ந்து மதுபிரியர்கள் அருந்துகின்றனர். இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர்.
போக்குவரத்து நெரிசல், மதுபிரியர்களின் தொந்தரவு போன்ற தொடர்ந்து ஏற்படுவதால், செங்கழுநீரோடை டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என, காஞ்சிபுரம் நகரவாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.