/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் சாலையில் பள்ளம் தார் ஊற்றி சீரமைக்க கோரிக்கை
/
உத்திரமேரூரில் சாலையில் பள்ளம் தார் ஊற்றி சீரமைக்க கோரிக்கை
உத்திரமேரூரில் சாலையில் பள்ளம் தார் ஊற்றி சீரமைக்க கோரிக்கை
உத்திரமேரூரில் சாலையில் பள்ளம் தார் ஊற்றி சீரமைக்க கோரிக்கை
ADDED : ஆக 04, 2024 01:18 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பஜார் வீதி வழியாக செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையில் தினமும் இயங்குகின்றன.
இந்த சாலையில், அம்பேத்கர் சிலை எதிரே சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை நேரங்களில் இந்த பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி விடுகிறது. அச்சமயம் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தை அறியாமல் விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, இச்சாலையில் பள்ளமான பகுதியை துார்த்து தார் ஊற்றி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.