ADDED : ஆக 08, 2024 02:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், வெள்ளைகுளம் தெரு, பாக்கு பேட்டையில் இருந்து புத்தேரி ஊராட்சி, சாலபோகம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர்கங்கையம்மன் கோவில் தெரு வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலை, மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலை சேதமடைந்த பகுதியில் மழைநீர் குட்டைபோல தேங்குகிறது.
இதனால், பள்ளம் இருப்பது தெரியாமல்செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள்விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, சேதமடைந்த கங்கையம்மன் கோவில் சாலையை சீரமைக்க, புத்தேரி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- டி.ராஜா,
காஞ்சிபுரம்.