/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாடு குறுக்கே ஓடியதால் காரில் அடிபட்டு வாலிபர் பலி
/
மாடு குறுக்கே ஓடியதால் காரில் அடிபட்டு வாலிபர் பலி
மாடு குறுக்கே ஓடியதால் காரில் அடிபட்டு வாலிபர் பலி
மாடு குறுக்கே ஓடியதால் காரில் அடிபட்டு வாலிபர் பலி
ADDED : செப் 02, 2024 10:26 PM
கூடுவாஞ்சேரி: செம்பாக்கம், மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் நிவாஸ், 22. தனியார் நிறுவன ஊழியர்.
நேற்று முன்தினம், 'யமஹா' இருசக்கர வாகனத்தில், கன்னிவாக்கத்தில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார். எதிர் திசையில், 'மாருதி ஸ்விப்ட்' கார் வந்து கொண்டிருந்தது.
சாலையோரம் சென்ற மாடு, திடீரென குறுக்கே ஓடியதால் நிலை தடு மாறிய நிவாஸ், மாட்டின் மீது மோதாமல் இருக்க, இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றார்.
ஆனால், கட்டுப்பாட்டை இழந்த பைக், எதிரே வந்த மாருதி கார் மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட நிவாஸ், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார், மாட்டின் உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர்.