/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மே தினத்தையொட்டி இருசக்கர வாகன பேரணி
/
மே தினத்தையொட்டி இருசக்கர வாகன பேரணி
ADDED : மே 01, 2024 10:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:தொழிலாளர் தினத்தையொட்டி, காஞ்சிபுரம்மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், காஞ்சிபுரத்தில் நேற்று இருசக்கர வாகன பேரணி நடந்தது.
பேரணியை, சங்கத் தலைவர் பாரதி துவக்கி வைத்தார். ரங்கசாமி குளம் அருகே துவங்கிய பேரணி, காந்தி சாலை, பச்சையப்பன் சாலை, இந்திராகாந்தி சாலை என, நகரின் பல்வேறு இடங்களுக்கு சென்றது.
இதில், ஏராளமான மோட்டார் மெக்கானிக்குகள், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

