/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் கம்பம் மீது கார் மோதி பெருமாட்டுநல்லுாரில் விபத்து
/
மின் கம்பம் மீது கார் மோதி பெருமாட்டுநல்லுாரில் விபத்து
மின் கம்பம் மீது கார் மோதி பெருமாட்டுநல்லுாரில் விபத்து
மின் கம்பம் மீது கார் மோதி பெருமாட்டுநல்லுாரில் விபத்து
ADDED : மே 03, 2024 12:46 AM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னிவாக்கத்தில் இருந்து, தர்க்காஸ் செல்லும் சாலையில், நேற்று அதிகாலை பாண்டியன், 28, என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார்.
சாந்தா தேவி நகர் வளைவில் அதிவேகமாக சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது.
மோதிய வேகத்தில் மின்கம்பம் உடைந்து, மின் கம்பிகள் அறுந்து தொங்கின. அதிகாலை நேரம் என்பதால், சாலையில் யாரும் இல்லை. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில், காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. இது குறித்து, அப்பகுதிவாசிகளின் புகார் அடிப்படையில், கூடுவாஞ்சேரி மின் வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து, மின் இணைப்பை துண்டித்து, உடைந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தினர்.
இதனால், நேற்று காலை 6:00 மணியிலிருந்து, மதியம் 2:30 மணி வரை மின் வினியோகம் இல்லாததால், அப்பகுதிவாசிகள் சிரமம் அடைந்தனர்.
அதனால், சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றாமல், தற்காலிகமாக மின் வினியோகம் வழங்கப்பட்டது.