/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சனிக்கிழமை பள்ளி வேலை நாள் தாமதமாக அறிவிப்பதாக குற்றச்சாட்டு
/
சனிக்கிழமை பள்ளி வேலை நாள் தாமதமாக அறிவிப்பதாக குற்றச்சாட்டு
சனிக்கிழமை பள்ளி வேலை நாள் தாமதமாக அறிவிப்பதாக குற்றச்சாட்டு
சனிக்கிழமை பள்ளி வேலை நாள் தாமதமாக அறிவிப்பதாக குற்றச்சாட்டு
ADDED : பிப் 21, 2025 07:31 PM
குன்றத்துார்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு 10ம் வகுப்பு செய்முறை தேர்வு மற்றும் பொது தேர்விற்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி நடைபெற உள்ளது.
இதன் காரணமாக, இன்று முழு பணி நாளாக பள்ளிகள் செயல்படும் என, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பில், 'இ - மெயில்' வாயிலாக நேற்று அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், பள்ளி இயங்குவது குறித்த அறிவிப்பு காலதாமதமாக வெளியிடப்படுவதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
தொடக்கப் பள்ளியில் பற்றாக்குறை வேலை நாள் இல்லை. ஆனாலும், கடந்த இரு வாரமாக சனிக்கிழமை பள்ளி இயங்கும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை வெளியிடுகிறார்.
தொடக்கப் பள்ளியை பொறுத்தவரை மாலை 4:10 மணிக்கு மாணவர்கள் வீட்டிற்கு புறப்படுவது வழக்கம். ஆனால், கல்வி துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு, மாலை 4:15 மணிக்கு மேல் தெரிவிக்கப்படுவதால், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெரியப்படுத்த முடியவில்லை.
இதனால், சனிக்கிழமை பள்ளி இயங்கினாலும், பெரும்பாலான மாணவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்கின்றனர். சனிக்கிழமை பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். பள்ளி வேலை நாள் குறித்து முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

