/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'சிப்காடில் அனுமதியின்றி செயல்படும் உணவு கூடங்கள் மீது நடவடிக்கை'
/
'சிப்காடில் அனுமதியின்றி செயல்படும் உணவு கூடங்கள் மீது நடவடிக்கை'
'சிப்காடில் அனுமதியின்றி செயல்படும் உணவு கூடங்கள் மீது நடவடிக்கை'
'சிப்காடில் அனுமதியின்றி செயல்படும் உணவு கூடங்கள் மீது நடவடிக்கை'
ADDED : ஜூலை 31, 2024 10:13 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம், வல்லம், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைபாக்கம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து சிபகாட் தொழில் பூங்காவில் 1,000க்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பெரும்பாலும் தனியார் உணவு தயாரிக்கும் கூடங்களில் இருந்தே உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், தனியார் உணவு தயாரிக்கும் கூடங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், முறையான அனுமதி மற்றும் போதுமான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல், தனியார் உணவு தயாரிக்கும் கூடங்கள் செயல்படுகின்றன.
உணவகமின்றி செயல்படும் சமையல் கூடங்கள், ‛சென்டர்லைஸ்ட் கிட்சன்' அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனால், பெருவாரியான சமையல் கூடங்கள் சாதாரன அனுமதியுடன் செயல்படுகிறது.
இதனால், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு அதிகபடியான உணவு தயாரிக்கும் போது, அதற்கு தகுந்தாற்போல் போதிய பாதுகாப்பு இல்லாததால் விபத்து ஏற்படுகிறது.
இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன், போந்துார் அருகே தத்தனுார் பகுதியில், தொழிற்சாலைகளுக்கு உணவு தயாரிக்க அனுமதியின்றி செயல்பட்ட தனியார் உணவு தயாரிக்கும் கூடத்தில் பாய்லர் வெடித்து, போந்துரைச் சேர்ந்த சுசிலா, 52, என்ற பெண் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''விபத்து ஏற்பட்ட தனியார் உணவு தயாரிக்கும் கூடம், தொழிற்சாலைகளுக்கு உணவு தயாரிக்க அனுமதி பெறவில்லை. மேலும், உணவு பாதுகாப்பு துறையிடம் இதுபோன்று அனுமதி இல்லாமல் செயல்படும் உணவு தயாரிக்கும் கூடங்கள் குறிதான விபரங்கள் கேட்டுள்ளோம். அதன் பின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அனுமதி இல்லாமல் செயல்படும் உணவு கூடங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தெரிவித்தார்.