/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பினாயூர்- வழித்தடத்தில் கூடுதல் நடை பஸ் இயக்கம்
/
பினாயூர்- வழித்தடத்தில் கூடுதல் நடை பஸ் இயக்கம்
ADDED : செப் 04, 2024 08:06 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பினாயூரில் இருந்து, சீட்டணஞ்சேரி கரும்பாக்கம், மெய்யூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக செங்கல்பட்டு வரை, தடம் எண்;டி9ஏ என்ற அரசு பேருந்து இயங்குகிறது. கடந்த ஆண்டுகளில், இந்த வழி தடத்தில் நாளொன்றுக்கு மூன்று நடை இயக்கப்பட்டு வந்த இப்பேருந்தை, ஆறு தடமாக இயக்க, பினாயூர் மற்றும் சுற்றுவட்டார் கிராமத்தினர், மாணவ - மாணவியர், தொழிலாளர் வலியுறுத்தி வந்தனர்.
கோரிக்கை ஏற்று நேற்று முதல், பினாயூரில் இருந்து, செங்கல்பட்டுக்கு தடம் எண்;டி9 அரசு பேருந்து சேவை 6 நடையாக கூடுதல் இயக்கம் துவக்கப்பட்டது.
உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார். சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார், பினாயூர் ஊராட்சித் தலைவர் வெங்கடேசன், துணைத்.தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.