/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற ஆண்டு விழா
/
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற ஆண்டு விழா
ADDED : மே 02, 2024 01:10 AM

சிங்கபெருமாள்கோவில்:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின், 42வது ஆண்டு விழாவையொட்டி, ஆதிபராசக்தி அம்மனுக்கு, நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதன்பின், இயற்கை வளம், மழைவளம், உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி, சிறப்பு கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, செவ்வாடை பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மன்ற தலைவர் துரைராஜ் தலைமையில் நடந்தது.
இந்த விழாவில், செங்கல்பட்டு அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சிவகுமார், காஞ்சிபுரம் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட பொருளாளர் தேவேந்திரன் உள்ளிட்டோர், செவ்வாடை பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

