/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொகுதி, பாகம் எண்கள் முறையாக குறிப்பிட அறிவுரை
/
தொகுதி, பாகம் எண்கள் முறையாக குறிப்பிட அறிவுரை
ADDED : மார் 28, 2024 09:21 PM
மாமல்லபுரம்:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, ஏப்., 19ம் தேதி நடக்கிறது. அரசு உயர்நிலை, மேல்நிலை, ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஓட்டுச்சாவடிகளில் தொகுதி எண், எந்த பகுதி வாக்காளர்கள் என்பதை குறிக்கும் பாகம் எண் ஆகியவை, வட்டத்திற்குள் குறிப்பிடப்படும். வட்டத்தின் மேலே பாகம் எண், கீழே தொகுதி எண் குறிப்பிடப்படும்.
மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில், திருப்போரூர் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வேலாயுதம் நேற்று ஆய்வு செய்தார்.
வட்டத்தில் இடம் பெறும் தொகுதி மற்றும் பாகம் எண்கள் வழக்கம்போல் குறிப்பிடப்பட்டிருந்தன. தேர்தல் ஆணைய புதிய விதியின்படி, வட்டத்தின் மேலே தொகுதி எண்ணும், கீழே பாகம் எண்ணும் என மாற்றி குறிப்பிடுமாறும், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் அவ்வாறே பின்பற்றுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
ஓட்டுச்சாவடிகளில் தங்கும் ஊழியருக்கு குடிநீர், கழிப்பறை, நடைதளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளனவா என்றும் ஆய்வு செய்தார்.

