/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நண்பரிடம் பேசியதால் ஆத்திரம் சிறுமிக்கு கட்டாய திருமணம்
/
நண்பரிடம் பேசியதால் ஆத்திரம் சிறுமிக்கு கட்டாய திருமணம்
நண்பரிடம் பேசியதால் ஆத்திரம் சிறுமிக்கு கட்டாய திருமணம்
நண்பரிடம் பேசியதால் ஆத்திரம் சிறுமிக்கு கட்டாய திருமணம்
ADDED : மே 03, 2024 09:01 PM
பெரம்பூர்:பெரம்பூரைச் சேர்ந்த ஏழை தம்பதியின் மூத்த மகளுக்கு 14 வயதாகிறது. அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த இவர், வீட்டின் அருகே உள்ள நண்பருடன் பேசியுள்ளார்.
இதை அவரது தந்தை கண்டித்துள்ளார். மேலும், ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள புளிவேந்தல் நரசிம்மம் கோவிலில் வைத்து, உறவினர் மகனான நரசிம்மா, 19, என்பவருடன் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த ஜன., 6ம் தேதி இத்திருமணம் நடந்துள்ளது.
இது குறித்து மாவட்ட சமூகநல அலுவலர் ஜமுனாபாய் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து, இருவரது பெற்றோர் மற்றும் திருமணம் செய்த இளைஞரிடம் விசாரிக்கின்றனர்.
சிறுமி ராயபுரம் குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.