/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண் சரிவில் சிக்கிய ஊழியர் 4 மணி நேரம் போராடி மீட்பு
/
மண் சரிவில் சிக்கிய ஊழியர் 4 மணி நேரம் போராடி மீட்பு
மண் சரிவில் சிக்கிய ஊழியர் 4 மணி நேரம் போராடி மீட்பு
மண் சரிவில் சிக்கிய ஊழியர் 4 மணி நேரம் போராடி மீட்பு
ADDED : ஜூன் 01, 2024 06:52 AM

பம்மல், : தாம்பரம் மாநகராட்சி, அனகாபுத்துார், வெங்கடேஸ்வரா நகர், அண்ணா தெருவில் பாதாள சாக்கடைக்கு பள்ளம் தோண்டி, குழாய் பதிக்கும் பணிகள் நடக்கின்றன.
பெருங்களத்துாரைச் சேர்ந்த சிவராஜ், 34, என்ற வாலிபர், 12 அடி ஆழம் உடைய பள்ளத்தில் இறங்கி, இப்பணியில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென மண் சரிந்து, சிவராஜின் இடுப்பு வரை மூடியது.
வெளியே வர முடியாமல் அவதிப்பட்ட அவரை மீட்கும் பணியில், தாம்பரம் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இயந்திரங்களை பயன்படுத்தாமல், நான்கு மணி நேரம் போராடி, கைகளாலேயே மண்ணை அகற்றி, சிவராஜை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட சிவராஜிக்கு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கிழக்கு தாம்பரம், ஆதிநகர், காமராஜ் தெருவில், 7 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டு, குழாய் பதிக்கும் பணி நடந்தது. இதில், திட்டக்குடியைச் சேர்ந்த தொழிலாளி முருகானந்தம், 27, என்பவர் மண் சரிவில் சிக்கினார்.
அவரை மீட்க ஜே.சி.பி., வாகனம் பயன்படுத்தப்பட்டது. மண்ணை அள்ளியபோது, எதிர்பாராதவிதமாக முருகேசனின் தலை துண்டாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால், இந்த சம்பவத்தில் வாகனங்கள் எதையும் பயன்படுத்தவில்லை. பாதாள சாக்கடை பணி விஷயத்தில், முறையான பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
இதை பின்பற்றாமல் அலட்சியமாக பணி செய்யும் ஒப்பந்த நிறுவனம் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.