/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
11 பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
11 பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஆக 29, 2024 09:40 PM
காஞ்சிபுரம்:பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை மற்றும் தேசிய நலக்குழுமம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் வாயிலாக, 11 ஒப்பந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், சுகாதார ஆய்வாளர், ஆதரவு ஊழியர் என, பல வகையிலான பணியிடங்களக்கு, 11 பேர் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இப்பணியிடங்களுக்கு, விண்ணப்ப படிவம், https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்து, சுயசான்றொப்பமிட்ட சான்றிதழ் நகல்களுடன், செப். 12ம் தேதிக்குள், காஞ்சிபுரம், ரயில்வே ரோட்டில் உள்ள மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் நிர்வாக செயலர் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
செப். 12ம் தேதிக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

