/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்
/
தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 24, 2024 10:39 PM
காஞ்சிபுரம்:தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்ச் செம்மல் என்ற விருது வழங்கப்படுகிறது.
அதன்படி, மாவட்டத்திற்கு ஒருவர் தேர்வு செய்து, அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதும், 25,000 ரூபாய் பரிசு தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும்.
எனவே, 2024ம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ் வளர்ச்சித் துறையின், https://tamilvalarchithurai.tn.gov.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் செய்வோர், தன் விபர குறிப்புடன், போட்டோ, தமிழ்ப்பணி ஆகிய விபரங்களுடன், காஞ்சிபுரம் தாலுகா வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக முகவரிக்கு, ஆக.,8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.