நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், வரதராஜ பெருமாள் கோவில் தெற்கு மாட வீதியில் உள்ள வியாஸராஜர் மடத்தில் வியாஸராஜ குருசார்வ பவுமரின் 485வது ஆராதனை மஹோத்ஸவம் நேற்று துவங்கியது.
இதில், காலை 7:00 மணிக்கு மன்யுஸுக்த ஹோமம், பஞ்சாமிர்த அபிஷேகம், மஹா மங்களஹாரத்தி உள்ளிட்டவை நடந்தது. இன்று, காலை 8:00 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், மஹா மங்களஹாரத்தி உள்ளிட்டவை நடக்கிறது.
ஆராதனை மஹோற்சவத்தின் நிறைவு நாளான, நாளை காலை 9:30 மணிக்கு, வியாஸராஜர், புரந்தரதாசர் கீர்த்தனைகள் நடக்கின்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் வியாஸராஜ மடத்தின் மேலாளர் மகேஷ் ஆச்சார் மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழுவினர் செய்திருந்தனர்.

