/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கத்தியை காட்டி மிரட்டி மொபைல் பறித்தோர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டி மொபைல் பறித்தோர் கைது
ADDED : ஏப் 28, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசிமேடு:புதுவண்ணாரப்பேட்டை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் அல்லா பகேஷ், 18. இவர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், 60 அடி பாலம் அருகே நின்றிருந்தார்.
அப்போது, அவ்வழியே ஆட்டோவில் வந்த மூவர், கத்தியைக் காட்டி மிரட்டி, அல்லா பகேஷின் மொபைல்போனை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்படி, காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட எண்ணுார் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த குப்புராஜ், 23, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஹரிஸ், 28, ராயபுரம், எஸ்.என்.செட்டி தெருவைச் சேர்ந்த நாசர், 34, ஆகிய மூவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

