/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் மாணவியர் நடந்து செல்லும் அவலம்
/
பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் மாணவியர் நடந்து செல்லும் அவலம்
பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் மாணவியர் நடந்து செல்லும் அவலம்
பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் மாணவியர் நடந்து செல்லும் அவலம்
ADDED : ஆக 24, 2024 12:38 AM

ஏகனாபுரம்,:சுங்குவார்சத்திரம் அடுத்த, மதுரமங்கலம் கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு, கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், ஏகனாபுரம், மேல்மதுரமங்கலம், தண்டலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ - மணவியர் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய உயர் கல்வி படித்து வருகின்றனர்.
பல்வேறு கிராமப்புற மாணவ - மாணவியர், பள்ளிக்கு பேருந்துகளில் சென்று படிப்பதற்கு, போதிய பேருந்து வசதி அறவே இல்லை.
உதாரணமாக, காஞ்சிபுரத்தில் இருந்து, பரந்துார் கிராமம் வழியாக, மதுரமங்கலம் வரையில் இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து சேவை, 'கொரோனா' காலத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும், தனியார் பேருந்து சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதனால், ஏகனாபுரம் கிராம மாணவ - மாணவியர் 2 கி.மீ., துாரம் நடந்து சென்று படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறையினர் ஆய்வு செய்து, பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.