/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல்
/
கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல்
ADDED : ஆக 16, 2024 10:50 PM
குன்றத்துார்:கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் கலையரசி, 31. இவர், தாம்பரம் அருகே முடிச்சூரில் தங்கி கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
அதே இடத்தில் பணியாற்றும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த விஷ்வா, 32, என்பவருடன் கலையரசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கலையரசியிடம் இருந்து விஷ்வா 1 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். அந்த பணத்தை நீண்ட நாட்களாக திருப்பி தராததால், அதை கலையரசி திரும்பக் கேட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், விஷ்வா, அவரது மனைவி வெண்ணிலா, 28, இவர்களது நண்பர்கள் சஞ்சய், 22, முகமதி ஆசிப், 23, ஆகியோர் இணைந்து, கலையரசியை சில தினங்களுக்கு முன், சோமங்கலம் அருகே எட்டியாபுரம் பகுதிக்கு வரவழைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அங்கிருந்து தப்பியோடி அருகில் உள்ள வீட்டில் தஞ்சம் அடைந்த கலையரசி, காவல் துறை கட்டுப்பாட்டு அறை '100'க்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
விரைந்து வந்த போலீசார் கலையரசியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த வழக்கில் தாக்குதல் நடத்திய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.