/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏ.டி.எம்., மையத்தில் ஓய்வெடுக்கும் நாய்கள்
/
ஏ.டி.எம்., மையத்தில் ஓய்வெடுக்கும் நாய்கள்
ADDED : ஆக 16, 2024 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர் : உத்திரமேரூரில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்., மையம் இயங்கி வருகிறது. இம்மையத்தில், வங்கியின் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, பிற வங்கி வாடிக்கையாளர்களும் பணம் எடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், ஏ.டி.எம்., மையத்திற்குள் தெருநாய்கள் புகுந்து சுற்றி வருவதால், வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்., மையத்திற்கு சென்று பணம் எடுக்க அச்சப்படுகின்றனர். இதனால், இவ்வங்கி வாடிக்கையாளர்கள் வேறு வங்கி ஏ.டி.எம்., மையத்தை தேடிச் செல்லும் நிலை உள்ளது.
எனவே, ஏ.டி.எம்., மையத்திற்குள் தெருநாய்கள் செல்வதை தடுக்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.