/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'ஆவின்' நெய், பனீர் கையிருப்பு இல்லை!
/
'ஆவின்' நெய், பனீர் கையிருப்பு இல்லை!
ADDED : ஜூன் 24, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஆவின் வாயிலாக, பால் மட்டுமின்றி நெய், வெண்ணெய், பனீர் உள்ளிட்ட, 230க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, மாநிலம் முழுதும் விற்கப்படுகின்றன. பால் பற்றாக்குறை காரணமாக, ஆவினில் கிட்டத்தட்ட, 10 மாதங்களுக்கு மேலாக வெண்ணெய் உற்பத்தி இல்லை.
இந்நிலையில், நேற்று, ஆவின் பாலகங்களில் நெய் மற்றும் பனீரும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். அம்பத்துார் பால் பொருட்கள் கிடங்கில், அவை கையிருப்பில் இல்லை.
பால் பொருட்கள் உற்பத்தி 23 சதவீதம் அதிகரித்து இருப்பதாக, பால்வளத்துறை அமைச்சரும், ஆவின் அதிகாரிகளும் கூறி வருகின்றனர். ஆனால், பலவகை பொருட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.