ADDED : மார் 25, 2024 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார், லோக்சபா தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் தொழிற்சாலை ஊழியர்களின் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
அந்த வகையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வெங்காடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதியின் உதவி தேர்தல் அலுவலரும், ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., சரவணகண்ணன் தலைமை தாங்கினார்.
இதில், வெங்காடு பகுதியில் இயங்கிவரும் கார் உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட உழியர்கள் பங்கேற்று, நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

