ADDED : ஆக 20, 2024 01:29 AM
காஞ்சிபுரம் : சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில், வளர் இளம்பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நடைபயண பிரசாரம் நடந்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சிமேயர் மகாலட்சுமி, மாவட்ட குழந்தைகள் நலபாதுகாப்பு அதிகாரி சக்தி காவியா, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில் ஆகியோர் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இதில், 200க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக, மாதவிடாய் காலங்களில் வளர் இளம் பெண்களின் சுகாதாரம்மற்றும் சுத்தம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு தேவையான சுகாதார உபகரணங்கள் கிடைக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவலியுறுத்தப்பட்டது.

