ADDED : ஏப் 17, 2024 10:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், உலக ஹீமோபிலியா எனப்படும் உலக ரத்தம் உறையாமை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இதில், டாக்டர் ராதிகா, ஹீமோபிலியா என்பது ரத்தம் உறையாமை நோய் எனவும், அதற்கான காரணம் மரபணு குறைபாடு எனவும், நோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து வரைபடம் மற்றும் வாசகங்களுடன் பொதுமக்களுக்கு விளக்கவுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள், மருத்துவ மனை செவிலியர்கள், ஊழியர்கள், கண்காணிப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

