நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கி வரும் 'பாஸ்' என்ற தொண்டு அமைப்பினர், மரம் வளர்த்தல், ரத்ததானம், கல்வி, வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, திருவள்ளூர் அரசினர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் காஞ்சிபுரம் அரசினர் புற்றுநோய் மருத்துவமனையுடன் இணைந்து, 63 மற்றும் 64வது தன்னார்வ ரத்ததான முகாமை, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் பகுதிகளில் நேற்று முன்தினம் நடத்தினர். இதில், 122 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.

