/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் வட்டாரத்தில் செங்கல் உற்பத்தி தீவிரம்
/
காஞ்சிபுரம் வட்டாரத்தில் செங்கல் உற்பத்தி தீவிரம்
ADDED : பிப் 25, 2025 11:30 PM

கீழம்பி:காஞ்சிபுரம் வட்டாரத்தில் கீழம்பி, முசரவாக்கம், கிளார் களத்துார், மேட்டுக்குப்பம், மேல்ஒட்டிவாக்கம், கூத்திரமேடு உள்ளிட்ட பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன.
வடகிழக்கு பருவமழை காரணமாக சூளைகளில், மூன்று மாதங்களாக செங்கல் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முடிந்து, கோடை காலம் துவங்கியுள்ளதால், காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள சூளைகளில், செங்கல் உற்பத்தி செய்யும் பணி துவக்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது.
இதனால், செங்கல் சூளை தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உற்பத்தி துவங்கியுள்ளதை தொடர்ந்து, ஒரு செங்கல் 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

