/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கருவேல மரங்கள் தீ வைத்து எரிப்பு
/
கருவேல மரங்கள் தீ வைத்து எரிப்பு
ADDED : ஏப் 17, 2024 10:30 PM

மதுமரங்கலம்:ராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் இருந்து, தைப்பாக்கம், கூரம், பெரிய கரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாம்புரம், மதுரமங்கலம் வழியாக ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடையும், கம்பன் கால்வாய், 44 கி.மீ., உடையது.
இந்த கால்வாய் வழியாக, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் வட்டங்களின், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதன் மூலம், 22,235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த கால்வாயில் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் நாணல் மண்டி உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு தீவைத்து எரித்துள்ளனர்.
இதனால், நெல்வாய் தண்டலம் கிராமம் அருகே, கம்பன் கால்வாய் முழுதும் இருந்த சீமைக்கருவேல மரங்கள் தீக்கு இரையானது.
இதை கண்காணிக்க வேண்டி பொதுப்பணித் துறையினர் கண்டு கொள்ளவில்லை என, கிராமத்தினர் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.

