/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கேன்டீன் வாகனத்தின் மீது பஸ் மோதி ஓட்டுனர் பலி; 5 பேர் படுகாயம்
/
கேன்டீன் வாகனத்தின் மீது பஸ் மோதி ஓட்டுனர் பலி; 5 பேர் படுகாயம்
கேன்டீன் வாகனத்தின் மீது பஸ் மோதி ஓட்டுனர் பலி; 5 பேர் படுகாயம்
கேன்டீன் வாகனத்தின் மீது பஸ் மோதி ஓட்டுனர் பலி; 5 பேர் படுகாயம்
ADDED : ஆக 28, 2024 07:13 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, ஒரகடம் அருகே, மேட்டுப்பாளையம் கிராமத்தில் தொழிற்சாலைகளுக்கு உணவு அளிக்கும் தனியார் கேன்டீன் இயங்கி வருகிறது.
இந்த நிலையில், கேன்டீனுக்கு சொந்தமான குட்டி யானை வாகனத்தில் 6 ஊழியர்களை ஏற்றிக் கொண்டு,நேற்று அதிகாலை ஸ்ரீபெரும்புதுார் - - சிங்கபெருமாள் கோவில் சாலை வழியே மேட்டுபாளையம் சென்றனர். வாகனத்தை மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஜன்டு மண்டல், 23, ஓட்டினர்.
மாத்துார் துணை மின் நிலையம் அருகே, மேட்டுப்பாளையம் சந்திப்பில் நின்றிருந்த போது, பின்னால் வந்த லாரி, கேன்டீன் வாகனம் மீது மோதியது. அப்போது கட்டுபாட்டை இழந்த கேன்டின் வாகனம், மறுபுறம் சாலையில் நகர்ந்து சென்ற போது, ஒரகடத்தில் இருந்து வந்த தனியார் நிறுவன பேருந்து மோதியது.
இந்த விபத்தில், குட்டி யானை வாகனத்தை ஓட்டி வந்த ஜன்டு மண்டல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும். வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருந்த 5 ஊழியர்களுக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஒரகடம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின், விபத்தில் பலியான ஜன்டு மண்டலின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விபத்துக்கான காரணமான ஓட்டுனர்களை பிடித்து விசாரிக்கின்றனர்.

