/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பட்டு சேலை கடைகளில் வியாபாரம் சூடுபிடிப்பு
/
பட்டு சேலை கடைகளில் வியாபாரம் சூடுபிடிப்பு
ADDED : ஆக 18, 2024 11:50 PM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகரின் பிரதான வியாபாரமான பட்டு சேலை விற்பனை ஆண்டு முழுதும் நன்றாகவே நடைபெறும். தனியார், கூட்டுறவு கடைகள் என, ஆண்டுதோறும் 300 கோடி ரூபாய்க்கு மேலாக பட்டு சேலை விற்பனை நடக்கிறது.
ஆனால், முகூர்த்த நாட்கள் இல்லாத, ஆடி மாதத்தில், வழக்கத்தை காட்டிலும், பட்டு சேலை விற்பனை கணிசமாக குறைவது வழக்கம்.
அந்த வகையில், ஒரு மாதமாகவே, காஞ்சிபுரத்தில் உள்ள கூட்டுறவு கைத்தறி விற்பனை சங்கங்களிலும், தனியார் கடைகளிலும் பட்டு சேலை விற்பனை கணிசமாக குறைந்து காணப்பட்டன. இதனால், வியாபாரிகள் பலரும் கவலையில் இருந்தனர்.
இந்நிலையில், ஆடி முடிந்து, ஆவணி மாதம் பிறந்தவுடன், காஞ்சிபுரம் நகர் முழுதும் வெளியூர்வாசிகள் குழுமியுள்ளனர்.
காந்திரோடு, நடுத்தெரு, பிஎஸ்கே தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டு சேலை கடைகளில், வெளியூர் வாடிக்கையாளர்கள் நேற்று குவிந்தனர். இதனால், பட்டு சேலை வியாபாரம் களை கட்டியுள்ளது.

