/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேகத்தடை மீது வர்ணம் பூசப்படுமா?
/
வேகத்தடை மீது வர்ணம் பூசப்படுமா?
ADDED : ஆக 27, 2024 12:59 AM

குன்றத்துார் ஒன்றியம், படப்பையில் இருந்து, ஒரத்துார் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலை வழியே, காவனுார், காட்டாங்கொளத்துார்உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில், ஒரத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே, தொடர்ச்சியாக ஐந்திற்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வேத்தடையின் மீது வெள்ளை நிற வர்ணம் பூசப்படவில்லை. இதனால், இவ்வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டி கள், வெள்ளை வர்ணம் பூசாமல் இருக்கும் வேகத்தடை மீது ஏறி, இறங்கி விழுந்து காயம்அடைகின்றனர்.
எனவே, வேகத்தடையின் மீது வெள்ளை வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சு. ராஜேந்திரன்,
ஒரத்துார்.