/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காணொலி வழியாக புற்றுநோய் மருத்துவ நிகழ்ச்சி
/
காணொலி வழியாக புற்றுநோய் மருத்துவ நிகழ்ச்சி
ADDED : ஆக 23, 2024 08:10 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 10 தொடர் புற்றுநோய் மருத்துவ கல்வி நிகழ்ச்சி நேரலையாகவும் காணொலி வழியாகவும் நேற்று நடந்தது. மருத்துவமனை இயக்குனர் பேராசிரியர் டாக்டர் சு. சரவணன் வரவேற்றார்.
ஓய்வு பெற்ற தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரும், தாகூர் மருத்துவக் கல்லூரியின் இயக்குனருமான பேராசிரியர் டாக்டர் ஆர். சாந்திமலர், புற்றுநோய் வலி நிவாரண சிகிச்சையில் மயக்க மருத்துவர்களின் பங்கு பற்றி குறித்து விளக்கவுரை ஆற்றினார்.
செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மயக்க மருத்துவ துறை உதவி பேராசிரியர் டாக்டர் சு.ரமணிகாந்த் புற்றுநோய்க்கான வலி நிவாரண சிகிச்சைக்கான கோட்பாடுகளும், அனுபவங்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மயக்க மருத்துவத் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ஜி.காஞ்சனா தலைமையில் பல்வேறு பேராசிரியர்கள் பங்கேற்ற குழு விவாதம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரன் உள்ளிட்ட 12 மருத்துவர்கள் காணொலி வழியாகவும், மீனாட்சி மருத்துவ கல்லூரி மயக்க மருத்துவத் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் திருமாறன் உள்ளிட்ட 50 மருத்துவர்கள் நேரடியாகவும் பங்கேற்றனர்.

