/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேசிய கொடியை அவமதித்ததாக பா.ஜ.,வினர் மீது வழக்கு
/
தேசிய கொடியை அவமதித்ததாக பா.ஜ.,வினர் மீது வழக்கு
ADDED : ஆக 16, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், சுதந்திர தின விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ.,வினர், நேற்று முன்தினம் காஞ்சிபுரம் நகர் முழுதும், இருசக்கர வாகனங்களில் பேரணி சென்றனர்.
இந்திரா காந்தி சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலக வாசலில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். பா.ஜ.,வினர் பேரணி சென்றபோது, தேசிய கொடியை, இருசக்கர வாகனங்களில் கட்டியபடி சென்றனர்.
இதை கண்காணித்த போலீசார், பா.ஜ.,வின் மாவட்ட தலைவர் பாபு உட்பட, 80 பேர் மீது தேசிய கொடியை அவமதிப்பு செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

