/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மொளச்சூர் சாலையில் உலாவரும் கால்நடைகள்
/
மொளச்சூர் சாலையில் உலாவரும் கால்நடைகள்
ADDED : ஆக 27, 2024 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சுங்குவார்சத்திரம் -- மப்பேடு சாலையில் உலாவரும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
கூட்டம் கூட்டமாக சாலையில் திரியும் மாடுகள், திடீரென சாலையின் குறுக்கே ஓடிவருவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம், சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும். மாட்டின் உரிமையாளர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, சாலையில் உலாவரும் கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.