ADDED : ஜூலை 29, 2026 04:41 PM
காஞ்சிபுரம், ஜூலை 30–
காஞ்சிபுரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கல்லுாரி முதல்வர் அண்ணாதுரை, கொடியசைத்து தொடங்கி வைத்தார். பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில் தொடங்கிய இந்த ஊர்வலம் டோல்கேட் பகுதி வரை சென்று, பின் மீண்டும் கல்லுாரியை வந்தடைந்தது.
ஊர்வலத்தின் போது மாணவர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும், சரியான விபரங்களை எவ்வித தயக்கமுமின்றி அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
மேலும், கணக்கெடுப்புப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
