/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை வழிகாட்டி பதாகை அமைப்பு
/
சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை வழிகாட்டி பதாகை அமைப்பு
சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை வழிகாட்டி பதாகை அமைப்பு
சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை வழிகாட்டி பதாகை அமைப்பு
ADDED : மே 01, 2024 12:44 AM

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நான்குவழி சாலையில் இருந்து, ஆறுவழி சாலை மற்றும், 18 இடங்கள் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த சாலை விரிவாக்க பணிக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மேம்பாலம் கட்டும் பணிகள் ஆங்காங்கே நடந்து வருகின்றன.
மேம்பாலத்திற்கும், சாலைக்கும் இணைப்பு ஏற்படுத்தும் பணிகள் முடங்கியுள்ளன. இருப்பினும், வெள்ளைகேட், ராஜகுளம் ஆகிய பகுதிகளில், சாலையோரம் மின் விளக்கு பொருத்தி பயன்பாட்டில் உள்ளது.
இந்த சாலை விரிவாக்க பணியின் போது, வெள்ளை கேட் அருகே இருந்த வழிகாட்டி பலகை அகற்றப்பட்டது. அதன் பின், வழி காட்டி பலகை அமைக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, காரப்பேட்டைக்கும், வெள்ளைகேட்டிற்கும் இடையே, தேசிய நெடுஞ்சாலையினர் சமீபத்தில் வழி காட்டி பலகை அமைத்து உள்ளனர்.
இதன் மூலமாக, சென்னையில் இருந்து பெங்களூரு மார்க்கமாக செல்லும் அரக்கோணம் வாகன ஓட்டிகளுக்கு சவுகரியமாக இருக்கும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.