/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிபுணர் தைராய்டு பிரச்னைக்கு காஞ்சியில் ஆலோசனை
/
சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிபுணர் தைராய்டு பிரச்னைக்கு காஞ்சியில் ஆலோசனை
சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிபுணர் தைராய்டு பிரச்னைக்கு காஞ்சியில் ஆலோசனை
சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிபுணர் தைராய்டு பிரச்னைக்கு காஞ்சியில் ஆலோசனை
ADDED : செப் 14, 2024 09:19 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தகவல் மையம், ஏழு மாதங்களாக இயங்கி வருகிறது.
இம்மையத்தில் வாரந்தோறும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் முகாமிட்டு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து இம்மருத்துமனையின் எண்டோகிரைனாலஜிஸ்ட் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.ராம்குமார் கூறியதாவது:
நம் கழுத்து பகுதியின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி, நம் வளர் சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தி சீராக்குகிறது. தைராய்டு சரியாக வேலை செய்யாதபோது பல அறிகுறிகள் வெளிப்படலாம்.
தைராய்டு பிரச்னையால் காரணமில்லாமல் உடல் எடை அதிகமாகும் அல்லது குறையும். மிகுந்த சோர்வு, அதிக இதய துடிப்பு, மன நிலையில் மாற்றம், முடி கொட்டுதல், கழுத்தில் வீக்கம், சீரற்ற மாதவிடாய் சுழற்சி, அதிக வெப்பம் மற்றும் குளிரை தாங்க முடியாமல் இருத்தல் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் தென்படும்.
தைராய்டு பிரச்னை உள்ளவர்களை கவனமாக கண்காணித்து சிகிச்சை கூற முடியும். தைராய்டு அறிகுறி உள்ளவர்கள் எண்டோகிரைனாலஜிஸ்டை அணுகி, சரியான காரணத்தை கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை பெறலாம்.
காஞ்சிபுரத்தில் உள்ள தகவல் மையத்தில் வாரந்தோறும் தைராய்டு, இதயவியல், நரம்பியல், எலும்பியல், நுரையீரல், சிறுநீரகம், குழந்தை மருத்துவம், புற்றுநோய், முதுகெலும்பு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, பித்தப்பை கற்கள், குடல் இரக்கம், கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய், மூலம் பவுத்திரம் உள்ளிட்ட பிரச்னைக்கு அறுவை சிகிச்சைக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குறைந்த கட்டணத்தில் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
மேலும், விபரங்களுக்கு 75488 22555, 72999 68686 என்ற மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளாலம்.
இவ்வாறு அவர் கூறினார்.