/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சென்னை - கொச்சி விமான சேவை வரும் 30ல் துவக்கம்
/
சென்னை - கொச்சி விமான சேவை வரும் 30ல் துவக்கம்
ADDED : மார் 09, 2025 03:10 AM
சென்னை: சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு தினசரி விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது.
ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே இயக்கி வந்தது. சுற்றுலா மற்றும் வர்த்தகத்திற்காக வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எனவே இந்த மார்கத்தில் கூடுதல் விமான சேவைகள் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதையடுத்து சென்னை - கொச்சி இடையேயான வாரம் முழுதும் செல்லும் விமானங்களை மார்ச் 30ம் தேதியில் இருந்து இயக்க ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கூடுதல் விபரங்களை airindiaexpress.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.