/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வு இன்று 'ரிசல்ட்'
/
சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வு இன்று 'ரிசல்ட்'
ADDED : மார் 28, 2024 09:10 PM
சென்னை:சென்னை பல்கலைக்கு உட்பட்ட கலை, அறிவியல் கல்லுாரிகளின், செமஸ்டர் தேர்வு இன்று வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலையின் இணைப்பில் உள்ள, கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு முன் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள், www.unom.ac.in என்ற இணையதளத்தில், இன்று வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்களுக்கு மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் தேவைப்பட்டால், தங்கள் கல்லுாரிகள் வழியே, வரும், 1 முதல், 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், மறுமதிப்பீடு தொகையாக, ஒரு தாளுக்கு, 1,000; மறு கூட்டல் தொகையாக, ஒரு பாடத்துக்கு, 300 ரூபாய் ரூபாய் செலுத்த வேண்டும் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.

