/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முதல்வர் இன்று வருகை 3,000 போலீசார் பாதுகாப்பு
/
முதல்வர் இன்று வருகை 3,000 போலீசார் பாதுகாப்பு
ADDED : ஜூலை 15, 2024 06:14 AM

கடம்பத்துார் : திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், கீழச்சேரி ஊராட்சியில் அமைந்துள்ளது அரசு நிதி உதவி பெறும் புனித அன்னாள் துவக்கப்பள்ளி. இங்கு இன்று காலை முதல்வரின் காலை உணவுத்திட்டத்தை துவக்கி வைக்க முதல்வர் ஸ்டாலின் வருகிறார்.
இதற்காக நேற்று மாலை உளுந்தை பகுதியில் முதல்வரின் பண்ணை தோட்டத்திற்கு வந்துள்ளார். அங்கு இரவு தங்கும் முதல்வர் இன்று காலை அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் காட்டு கூட்டு சாலை முதல் கீழச்சேரி வரை 11 கி.மீ., துாரத்திற்கு நெடுஞ்சாலை மீடியன் மற்றும் சாலையின் இருபுறமும் கொடிக்கம்பங்களும், மீடியன் பகுதியில் வாழை மரங்களும் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், கடலுார், விழுப்புரம் உட்பட 10 மாவட்டங்களை சேர்ந்த 3,000 போலீசார் காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் கூட்டு சாலையிலிருந்து கீழச்சேரி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.