/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிலத்தகராறில் சித்தனக்காவூர் மாஜி தலைவர் கைது
/
நிலத்தகராறில் சித்தனக்காவூர் மாஜி தலைவர் கைது
ADDED : மே 30, 2024 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சித்தனக்காவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ், 52; ஊராட்சி முன்னாள் தலைவர்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவருக்கும் சொத்து பிரச்னை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்று முன்தினம் இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் நிலவியது. இதுகுறித்து, கன்னியப்பன் மனைவி லட்சுமி அளித்த புகாரின்படி, சாலவாக்கம் போலீசார் தேவராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.