/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீநிவாச பெருமாளுக்கு சித்திரை உற்சவம்
/
ஸ்ரீநிவாச பெருமாளுக்கு சித்திரை உற்சவம்
ADDED : ஏப் 15, 2024 03:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : தேவரியம்பாக்கம் கிராமத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று சித்திரை மாத துவக்க விழா வெகு விமரிசையாக நடந்தது.
இந்த உற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
இதையடுத்து, மலர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் எழுந்தருளினர். பெருமாளை தேவரியம்பாக்கம் கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினர் வழிபட்டு சென்றனர்.

