/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சித்ரகுப்தர் கோவில் உண்டியல் வசூல் ரூ.5 லட்சம்
/
சித்ரகுப்தர் கோவில் உண்டியல் வசூல் ரூ.5 லட்சம்
ADDED : ஜூன் 15, 2024 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோவிலில் கடந்த ஏப்., மாதம் சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை எண்ணப்பட்டு வருகின்றன.
அதன்படி கோவில் செயல் அலுவலர் அமுதா, ஆய்வாளர் அலமேலு. கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரகுநாதன், அறங்காவலர்கள் சந்தானம், ராஜாமணி, கோவில் குருக்கள் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில், கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டன.
இதில், 5 லட்சத்து 15,108 ரூபாய் கோவிலுக்கு வருவாயாக கிடைத்தது.