/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நீர்வழித்தடத்தில் அடைப்பு மழைநீர் செல்வதில் சிக்கல்
/
நீர்வழித்தடத்தில் அடைப்பு மழைநீர் செல்வதில் சிக்கல்
நீர்வழித்தடத்தில் அடைப்பு மழைநீர் செல்வதில் சிக்கல்
நீர்வழித்தடத்தில் அடைப்பு மழைநீர் செல்வதில் சிக்கல்
ADDED : செப் 01, 2024 03:46 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மஞ்சள் நீர்கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக சென்று நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.
இக்கால்வாய் மீது 40 கோடி ரூபாய் செலவில், கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், மஞ்சள் நீர் கால்வாயில், காமராஜர் வீதியின் குறுக்கே உள்ள சிறுபாலத்தின் நீர்வழித்தடத்தில் குப்பைக் கழிவு மற்றும் மண் குவியலால் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், வடகிழக்குபருவமழை தீவிர மடைந்து, மஞ்சள் நீர்கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், காமராஜர் வீதியின் குறுக்கே உள்ள சிறுபாலத்தின் நீர்வழித்தடம் வழியாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, காமராஜர் வீதியில், சிறுபாலத்தின் கீழ் நீர்வழித்தடத்தில் மண்டிகிடக்கும் மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.