/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மக்களுடன் முதல்வர் முகாம்; 510 மனுக்கள் குவிந்தன
/
மக்களுடன் முதல்வர் முகாம்; 510 மனுக்கள் குவிந்தன
ADDED : ஆக 16, 2024 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், ஒரக்காட்டுப்பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்றுநடந்தது.
இம்முகாமில், ஒரக்காட்டுப்பேட்டை ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் நடராஜன் ஆகியோர் பங்கேற்று, குறைந்த மின்னழுத்தம் மற்றும் தாங்கல் பகுதியில், அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனுக்கள் அளித்தனர்.
காவிதண்டலம் ஊராட்சி தலைவர் இந்திரா, சமுதாயக் கூடம் மற்றும் பாலாற்று மேம்பாலத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தக் கோரியும் மனு அளித்தார். இந்த முகாமில், 510மனுக்கள் அளிக்கப்பட்டன.

