/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கம்மவார்பாளையத்தில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி
/
கம்மவார்பாளையத்தில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி
ADDED : மே 14, 2024 07:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கம்மவார்பாளையம் கிராமத்தில், கங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு, சித்திரை மாத கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நேற்று வெகுவிமரிசையாக நடந்தது.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, நேற்று, காலை 10:00 மணி அளவில் கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பிற்பகல் 1:00 மணி அளவில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தன. இரவு 7:00 மணி அளவில் கும்ப படையலிடும் நிகழ்ச்சி நடந்தது.

