/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
/
இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
ADDED : ஆக 08, 2024 02:26 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 27வது வார்டு, நத்தப்பேட்டை,தண்டுமாரியம்மன் கோவில் அருகில், 35 ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வாயிலாகஅப்பகுதியினருக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் தொட்டிகட்டப்பட்டு, 35ஆண்டுகள் கடந்த நிலையில், தொட்டியை தாங்கும் துாண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி எப்போது இடிந்து விழுமோ என,அப்பகுதியினர்அச்சத்தில் உள்ளனர்.
எனவே, சிதிலமடைந்த நிலையில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்கத்தொட்டியை இடித்துவிட்டு, புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என,நத்தப்பேட்டை,தண்டுமாரியம்மன் கோவில் பகுதியினர்வலியுறுத்தி உள்ளனர்.