/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூலி ஆட்கள் கிடைக்காததால் இயந்திரங்களில் வைக்கோல் சேகரிப்பு
/
கூலி ஆட்கள் கிடைக்காததால் இயந்திரங்களில் வைக்கோல் சேகரிப்பு
கூலி ஆட்கள் கிடைக்காததால் இயந்திரங்களில் வைக்கோல் சேகரிப்பு
கூலி ஆட்கள் கிடைக்காததால் இயந்திரங்களில் வைக்கோல் சேகரிப்பு
ADDED : ஏப் 16, 2024 07:04 AM

காரை, : காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1.20 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ளனர். அவ்வாறு சாகுபடி செய்த விவசாயிகள் நெல் அறுவடை செய்யும் பணி நடந்து வருகின்றன.
அறுவடை செய்த நெல்லை, அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மற்றும் வைக்கோலை ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு விலைக்கு கொடுத்து விடுகின்றனர்.
காரை, சிறுவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், ஆடு, மாடு வைத்திருக்கும் விவசாயிகள் வைக்கோல் சேகரிக்க கூலி ஆட்களை கூப்பிட்டால், வெயில் அதிகமாக உள்ளது. நாங்கள் வரவில்லை என, நழுவி விடுகின்றனர்.
சிறுணை, கூரம், பெரியகரும்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், பெண் கூலித் தொழிலாளர்களை வைத்து, வைக்கோல் சேகரித்து ஒரே இடத்தில் குவித்து வைக்கின்றனர்.
கூலிக்கு ஆட்கள் கிடைக்காத இடங்களில், காரை, சீயட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், வைக்கோல் கட்டு கட்டும் டிராக்டர் இயந்திரத்தின் உதவியுடன் வைக்கோல் சேகரிக்கின்றனர்.
ஒரு கட்டுக்கு, 40 ரூபாய் செலவழித்து வைக்கோல் சேகரிக்கின்றனர். அதன்பின், ஒவ்வொரு கட்டாக எடுத்து வந்து, குவித்து வைக்கின்றனர்.

