/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் ஒன்றியத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகள் தரமறிந்த கலெக்டர்
/
உத்திரமேரூர் ஒன்றியத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகள் தரமறிந்த கலெக்டர்
உத்திரமேரூர் ஒன்றியத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகள் தரமறிந்த கலெக்டர்
உத்திரமேரூர் ஒன்றியத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகள் தரமறிந்த கலெக்டர்
ADDED : பிப் 28, 2025 12:46 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பெருங்கோழி, தளவாரம்பூண்டி, புலியூர் ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி துறையின் கீழ், பல்வேறு வளர்ச்சி திட்ட பணி நடந்து வருகிறது.
பணிகளை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பார்வையிட்டார். பெருங்கோழி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 16.55 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து, அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையை பார்வையிட்டார்.
தொடர்ந்து, தளவாரம்பூண்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை ஆய்வு செய்து, பின், அதே பகுதியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், தலா 3.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 16 குடியிடிருப்பு ஆய்வு செய்தார்.
புலியூர் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், தலா 3.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 6 குடியிருப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
கட்டியாம்பந்தல் ஊராட்சியில் உள்ள தொடக்க பள்ளியை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.