/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கன்டெய்னர் சக்கரத்தில் சிக்கி கல்லுாரி மாணவர் உயிரிழப்பு
/
கன்டெய்னர் சக்கரத்தில் சிக்கி கல்லுாரி மாணவர் உயிரிழப்பு
கன்டெய்னர் சக்கரத்தில் சிக்கி கல்லுாரி மாணவர் உயிரிழப்பு
கன்டெய்னர் சக்கரத்தில் சிக்கி கல்லுாரி மாணவர் உயிரிழப்பு
ADDED : பிப் 25, 2025 11:43 PM

ஸ்ரீபெரும்புதுார்:படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் அய்யப்பன் என்பரின் மகன் லக்ஷ்மிகாந்தன், 18. மண்ணிவாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரில் முதலாமாண்டு பி.பி.ஏ., படித்து வந்தார்.
நேற்று மாலை, 'பல்சர்' இருசக்கர வாகனத்தில், நண்பர் லோகேஷ் என்பவரை ஒரகடத்தில் இறக்கி விட்டு, செரப்பனஞ்சேரிக்கு திரும்பினார். காரணிதாங்கல் செக்போஸ்ட் அருகே வந்தபோது, ஒரகடத்தில் இருந்து வண்டலுார் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி, இருசக்கர வாகனம் மீது உரசியது.
இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த லக்ஷ்மிகாந்தன், கன்டெய்னரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரடகம் போலீசார் உடலை மீட்டு, பிரதே பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.