/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சங்கரா கலை கல்லுாரியில் ‛கம்பீட் - 2025' கருத்தரங்கம்
/
சங்கரா கலை கல்லுாரியில் ‛கம்பீட் - 2025' கருத்தரங்கம்
சங்கரா கலை கல்லுாரியில் ‛கம்பீட் - 2025' கருத்தரங்கம்
சங்கரா கலை கல்லுாரியில் ‛கம்பீட் - 2025' கருத்தரங்கம்
ADDED : மார் 06, 2025 08:00 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதுகலை கணினி அறிவியல் ஆராய்ச்சி துறை சார்பில், 'கம்பீட் - 2025' எனப்படும் கல்லுாரிகளுக்கு இடையேயான கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் முனைவர் கலைராம வெங்கடேசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் கோபிநாதன், இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி போட்டியை துவக்கி வைத்தார்.
இதில், 15க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் போட்டியில் பங்கேற்றனர். மேல்மருவத்துார் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒட்டுமொத்த பரிசையும் தட்டிச் சென்றது.
வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, டி.ஜி. வைஷ்ணவ கல்லுாரி முதல்வர் மற்றும் சென்னை பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் பேராசிரியர் முனைவர் சந்தோஷ் பாபு, கோப்பை மற்றும் நினைவு பரிசு வழங்கினார். கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் ஹரிஹரன் வரவேற்றார். துறை தலைவர் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.